தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவமனைகளிலும் மகளிருக்கு மகப்பேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தினசரி சராசரியாக 1,496 பிரசவங்கள் நடைபெறுகின்றன.
சமீபகாலமாக தனியார் மருத்துவமனையில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2011ல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்கப்படும் பிரசவங்கள் 28.3% ஆக இருந்த நிலையில், தற்போது 10.7% என்ற நிலையில் உள்ளது. தனியார் மருத்துவமனை பிரசவங்கள் 40% ஆக அதிகரித்துள்ளன.