Categories
அரசியல்

“குறையும் கொரோனா” தப்பிய தமிழ்நாடு…அயராது போராடும் சுகாதாரத்துறையினர்…!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரானாவின் தாக்கம் மிகக்கணிசமான அளவில் குறைந்துள்ளது .

தமிழக அரசின்  பல்வேறு தடுப்பு நடவடிக்கையினை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் சுகாதாரத்துறையினரின் கடுமையான போராட்டத்தினால் இப்போது படிப்படியாக குறைந்துள்ளது .  20 மாவட்டங்களில்   தினசரி பாதிப்பு 6 ஆயிரம் வரை இருந்த நிலையில் தற்போது அது 3 ஆயிரமாக குறைந்துள்ளது.நேற்றைய நிலவரப்படி சென்னையில் 11 பேரும்  , காஞ்சீபுரத்தில் 3 பேரும்  மட்டுமமே    உயிரிழந்துள்ளனர். இதற்கு  சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் உத்வேகத்துடன் களப்பணி ஆற்றியதால் நல்ல பலன் கிடைத்துள்ளது .

இதுவரை தமிழகத்தில்  7 லட்சத்து 3 ஆயிரத்து 250 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் அதிலிருந்து மீண்டு வந்தனர். பாதிப்பைவிட குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . கடந்த மாதங்களில் தினசரி உயிரிழப்பு 80,70 ல் இருந்து 33 ஆக குறைந்துள்ளது. பாதிப்பு அதிகமாக இருந்த வடக்கு, மத்திய, மற்றும் மேற்கு மாவட்டங்களில் இப்போது தொற்று பரவல் குறைந்து வருகிறது. தற்போது 32 ஆயிரத்து 960 பேர் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |