அறுவடை எந்திரங்கள் குறைவாக உள்ளதால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் வேதனையில் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரத்தற்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் மேட்டூர் அணையில் இருந்து கடைமடை விதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பா சாகுபடி செய்ய போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் நிலத்தடி நீர் மற்றும் கிணறுகள் மூலம் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது சம்பா பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் பெருமகளூர், பூக்கொல்லை, கழனி கோட்டை, முடச்சிக்காடு போன்ற பகுதிகளிலும் சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அறுவடை எந்திரங்கள் குறைவாக இருப்பதால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.