நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்தால் ஏற்படும் மாசுபாட்டை கண்டித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெதர்லாந்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் மிகப்பெரிய ஆதாரமாக ஷிபோல் விமான நிலையம் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அடுத்து குறுகிய தூர விமானங்கள் மற்றும் தனியார் ஜெட் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி உள்ளனர். குறைவான விமானங்கள், அதிக ரயில்கள் என்னும் தலைப்பில் அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் விமான நிலையத்திற்குள் அதிரடியாக நுழைந்து தனியார் விமான நிலையங்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்ற பகுதிக்கு சென்றுள்ளனர். இதன்பின் அங்கு புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானங்கள் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல தனியார் விமானங்கள் புறப்படுவதை அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை அடுத்து விமான நிலைய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.