Categories
மாநில செய்திகள்

குற்றங்கள் நடக்காமல் தடுக்கின்ற துறையாக மாற வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் குற்றங்களுக்கு தண்டனை வாங்கித் தரும் துறையாக இல்லாமல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கிற துறையாக காவல்துறை மாற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால் தான் தொழில் சிறக்கும். முதலீடுகள் பெருகும், மக்கள் அச்சமற்று உழைப்பை செலுத்துவார்கள். கல்வி மேன்மை அடையும் அத்தகைய பணியை நீங்கள் செய்கிறீர்கள் என பாராட்டியுள்ளார்.

Categories

Tech |