குற்றப்பின்னணி வேட்பாளர்கள் விவரத்தை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் குற்றப்பின்னணி வேட்பாளர்களின் விவரங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் நடைமுறை படுத்தவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக கூடிய அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் ,
கடந்த நான்கு பொதுத் தேர்தல்களிலும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதிகளவில் போட்டியிட்டது ஒரு கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது என நீதிபதிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். அதே நேரத்தில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்றப்பின்னணி விவரங்கள் 48 மணி நேரத்திற்குள் பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் தேர்தல் ஆணைய இணையதளங்களில் , அரசியல் கட்சிகளும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களும் கட்சி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார்.
குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் பட்ட காரணங்களை அரசியல் கட்சிகளும் வெளியிட வேண்டும் என்ற ஒரு உத்தரவையும் நீதிபதி பிறப்பித்துள்ள்ளார். மேலும் சட்டப்பேரவை , நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் குற்ற பின்னணியை தேர்தல் ஆணையத்திடம் சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அளிக்கவேண்டும்.
முறைப்படி அரசியல் கட்சிகள் இந்த விவரங்களை தெரிவிக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை சாமானிய மக்களும் அறிய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்த முக்கியத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.