ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதை கண்டித்து கணக்குத்துறை சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சம்பளகணக்கு அலுவலகம் முன்பு கருவூல கணக்குத் துறை சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாநில செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கணக்கு துறை ஊழியர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியதை கண்டித்து இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.