நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் நடைபெற்ற குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் 451 சவரன் தங்க நகைகள், 7 1/2 கிலோ வெள்ளி பொருட்கள் ,5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணம், 2 லாரிகள்,மற்றும் 100 செல்போன்கள் உள்ளிட்டவை உரியவர்களிடம் வழங்கப்பட்டன. இதனை தேசிய கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா வழங்கினார் .
மேலும் வீடுகள் கடைகளில் குற்றங்கள் நடப்பதை முன்கூட்டியே தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் தன்னிச்சையாக கேமராக்கள்பொறுத்த முடியவில்லை என்றால் குழுவாக சேர்ந்து அமைக்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.