கர்நாடக மாநிலத்தில் கஞ்சா வழக்கில் கைதான 2 பேரிடம் போலீசார் லஞ்சம் பெற்று வழக்கை முடிக்க முயன்றதில் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், ஹூப்ளி நகரில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் 2 நபர்கள் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமிருந்தும் லஞ்சம் பெற்ற போலீசார், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் வழக்கை முடிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல்கள் அப்பகுதியிலுள்ள உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு, ஹூப்பள்ளி தார்வாட் காவல் ஆணையர் திரு.லபுராம் இது குறித்து விசாரணை நடத்த துணைக் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். துணைக் காவல் ஆணையர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் உட்பட ஏழு போலீசாரையும் காவல் ஆணையர் லபுராம் சஸ்பெண்ட் செய்தார். கஞ்சா வழக்கில் கைதான கைதிகளிடமிருந்தே போலீசார் லஞ்சம் பெற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.