Categories
மாநில செய்திகள்

“குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்துக” வைகோ கடும் கண்டனம்…..!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் நேற்று பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் இறங்கியதுமே, கல்வித்துறையும், காவல்துறையும் மாணவி மரணத்துக்கு உண்மையான காரணத்தை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்வோம் என்று மக்களிடம் நம்பிக்கையை ஊட்டி நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கான பின்னணி, புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |