உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “விவசாயிகளின் மீது யாருடைய கார் மோதியது என்பதை அனைவரும் தெள்ளத் தெளிவாகப் பார்த்தோம்.
அதில் யார் குற்றவாளி? என்பது தெரிய வருகிறது. மேலும் இதுவரை குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்யவில்லை. மாறாக பாஜக அரசு குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது. எனவே அஜய் மிஸ்ரா இந்த சம்பவத்திற்கு பொறுப்பை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.