டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் காந்தி சிலை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் பெண் காவலர் சபியா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் கம்பம் சட்டமன்ற தொகுதி தலைவர் தங்கபாண்டி, செயலாளர் குணசேகரன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் இசைமதிவாணன், நகர செயலாளர் மதன் சதீஷ்குமார் உள்பட பல நிர்வாகிகளும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனைதொடர்ந்து ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெண் காவலரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.