நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் காவல் துறை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புலம் பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சூரத் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் போது, தனியாக இருந்த சிறுமிக்கு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அந்த இளைஞன் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பின் 26 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் 53 ஆதாரங்களின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்பைக் கேட்டு கோபமடைந்குற்றவாளி, ி தனது செருப்புகளை கழற்றி நீதிபதி நோக்கி எறிந்தார். ஆனால் செருப்பு நீதிபதி மேல் படவில்லை. சாட்சிக் கூண்டில் அருகே விழுந்தது. இந்த சம்பவத்தால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குற்றவாளிகளை காவல்துறையினர் பிடித்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.