Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“குற்றவாளியை காட்டி கொடுத்தால் 50 லட்ச ரூபாய் பரிசு” சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரின் அதிரடி அறிவிப்பு …..!!!!

சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எஸ். ஐ. டி. மற்றும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராமஜெயம் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு  மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  ஆனால் இதுவரை குற்றவாளி  கண்டுபிடிக்கபடவில்லை.

இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.எனவே நமது மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அதிக மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் தொழிலதிபர் ராமஜெயத்தை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 50 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட உள்ளது என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Categories

Tech |