கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் நீர் வரத்து தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிக்கு சென்று குளித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மீண்டும் குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து குற்றால மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.