Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவியில்… சந்தோஷமாக குளித்த சுற்றுலா பயணிகள்…!!!

குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஆனால் தென்காசி, சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக காற்று வீசி வந்த நிலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் அங்கு வந்து சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தார்கள். ஆண்கள் குளிக்கும் மெயின் அருவியில் தண்ணீர் குறைவாக இருந்தது. ஆனால் பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் இல்லை என்பதால் ஆண்கள் குளிக்கும் பகுதியில் பெண்களும் குளித்து சென்றார்கள். மேலும் ஜூன் மாதத்தில் சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

Categories

Tech |