Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல்”…. அதிமுக போட்டியாளர் வெற்றி….!!!!

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்றார்.

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு காலையில் தலைவர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் 8 பேர் கலந்து கொண்டார்கள். இதில் அதிமுக சார்பாக எம்.கணேஷ் தாமோதரன் என்பவரும் திமுக சார்பாக கே.பி.குமார் பாண்டியன் என்பவரும் போட்டியிட்டார்கள். இதையடுத்து உறுப்பினர்கள் மறைமுகமாக வாக்களித்தார்கள்.

இதில் அதிமுக 5 வாக்குகளும் திமுக 3 வாக்குகளும் பெற்றது. ஆதலால் அதிமுக கணேஷ் தாமோதரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து பிற்பகலில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பாக நான்கு பேரும் திமுக சார்ந்த ஒருவரும் போட்டியிட்டார்கள். மேலும் மூன்று உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. அதிமுகவில் தங்கபாண்டியன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. திமுகவில் இருந்து யாரும் போட்டியிடாததால் தங்கபாண்டியன் வெற்றி பெற்றார்.

Categories

Tech |