Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குற்றாலம்-மணிமுத்தாறு அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை…!!!!

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றாலம் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குற்றால மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே பாதுகாப்பு கருதி போலீசார் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இதே போல் ஐந்தருவி, பழைய குற்றாலம், மணிமுத்தாறு உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |