Categories
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் இன்று முதல் அனுமதி…. வெளியான செம்ம ஹேப்பி நியூஸ்….!!!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு சில மாதங்களாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 28-ஆம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. பின்னர் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அருவிகளில் குளித்து வந்தனர். இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டை முன்னிட்டு 3 நாட்களுக்கு அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் குற்றால அருவிகளில் 3 நாட்கள் தடைக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் பொதுமக்கள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |