Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. சுற்றுலா பயணிகளுக்கு நீடிக்கும் தடை….!!

அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்த ஆண்டு சீசன் ஜூன் மாத இறுதியில் தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் மாதம் முடிந்தும் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நேற்று நான்காவது நாளாக மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டது. மேலும் பழைய குற்றாலம், புலியருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சொல்கின்றனர்.

Categories

Tech |