குற்றப்பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றம் இல்லா சென்னை நகரமாக மாற்றுவதற்கு DriveAgainst Rowdy Elements(DARE) வாயிலாக சோதனைகள் நடத்தி குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை எடுத்து வருகிறது. சரித்திரிபதிவேடு குற்றவாளிகள், குற்றவழக்குகள் உள்ள நபர்களுக்கு எதிரான ஒரு சிறப்பு தணிக்கையை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்படி, இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில் துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில் நேற்று முன்தினம் (10/09/2022) சரித்திர பதிவேடு ரவுடிகள் (HS Rowdies) மற்றும் கொலை முயற்சி, 2க்கும் அதிகமான அடிதடி வழக்குகள் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையில் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை பிணை பத்திரம் எழுதிகொடுத்த 490 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை (HS Rowdies) கண்காணித்தும், நேரில் சென்று விசாரித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி 20 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் திருந்திவாழ்வதற்கு நன்னடத்தை பிணை பத்திரம் (Bind over)பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுவரையிலும் 2,255 குற்றவாளிகளிடமிருந்து நன்னடத்தை பிணை பத்திரம் (Bind Over) பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 7 நபர்களிடம் இருந்து திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை பிணைபத்திரம் (Bind over) பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுவரையிலும் 404 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முன்பே 207 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெரு நகர காவல்துறையினர் தொடர்ந்து இதுபோன்ற சிறப்பு சோதனைகளை நடத்தி வருவதால், குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் குற்றப்பின்னணி நபர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.