தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 12 நாட்கள் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்ததால் 13 நிரந்தர உண்டியலுடன் 56 சிறப்பு உண்டியல்களும் வைக்கப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் முன்னிலையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 69 உண்டியல்களையும் திறந்து எண்ணியுள்ளனர். இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பல்வேறு சமூக நல அமைப்புகள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 3 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 114 ரூபாய் உண்டியல் காணிக்கையாக வசூலிக்கப்பட்டது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |