நவராத்திரி விழாவில் ஆயுத பூஜை 9-வது நாளும், விஜயதசமி 10-வது நாளும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இறுதி நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெற இருக்கிறது.
இந்த ஆண்டு தசரா திருவிழா அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பக்தர்கள் வழக்கம் போல் வேடமணிந்து, குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வேடங்கள் அணிந்து ஆடிப்பாடி காணிக்கை வசூல் செய்தனர்.அவ்வாறு வேடமணிந்து முத்தாரம்மனுக்கு நேத்திக்கடன் செலுத்தினால், துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும், வாழலாம் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.
இதையடுத்து குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் முக்கிய நாளான சூரசம்ஹாரம் இன்று நடைபெறவிருக்கிறது. புரட்டாசி மாதம் வளர்பிறையில் தொடங்கி விஜயதசமி நாளில் நவராத்திரி விழா முடிவடையும். இதில் 9 வது நாளில் ஆயுத பூஜை யாகவும் 10 வது நாளில் விஜயதசமி தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இவை கர்நாடகாவில் தசரா என்றும், மேற்கு வங்கத்தில் துர்க்கை பூஜை என்றும், கொண்டாடப்படுகிறது.