Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலசை தசரா திருவிழா…. இந்த 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது.. இதன் தொடர்ச்சியாக நாளை (15ஆம் தேதி) சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகின்றது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 7 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.. அதாவது, 7ஆம் தேதி மற்றும் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது..

இந்நிலையில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.. அதேபோல 16, 17ஆம் தேதி நடைபெறும் கோயில் நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்றும், 18ஆம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |