Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலசை தசரா விழாவில் ஆபாச பாடல்களுக்கு தடை….. ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு..!!

குலசை தசரா விழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள், சினிமா பாடல்கள் பாடவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவின் போது குலசேகரப்பட்டினத்தில் நடக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இந்த திருவிழாவின்போது பக்தி பாடல்கள் அல்லாத  பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாட உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. அதாவது, கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் என்னும் பெயரில் ஆபாச நடனங்கள் ஆடுவதையும், ஆபாச பாடல்களை இசைப்பதையும் அனுமதிக்க முடியாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் பக்தி பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒளிபரப்பப்படவில்லை என்பதை தூத்துக்குடி எஸ்பி மற்றும் ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குலசை தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு  நடனம் ஆடுவதற்கு தடை விதிக்க கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |