Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலசை தசரா விழா….. “நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம்”…. ஆனால் ஆபாசம் கூடாது…. ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

குலசை தசரா விழா நிகழ்ச்சிகளில் திரைப்பட டிவி மற்றும் நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி கோரி கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குலசை தசரா நிகழ்ச்சிகளில் திரைப்பட டிவி மற்றும் நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம். ஆனால் குலசை தசரா விழாவில் ஆபாச நடனம் இடம்பெறுவதை அனுமதிக்க கூடாது. ஆபாச நடனங்கள் இடம்பெற்றால் சினிமா, டிவி நடிகர் நடிகைகளுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் அபராதம் விதிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும்  ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளை வீடியோ பதிவு செய்யவேண்டும். எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் சுமூகமான முறையில் இந்த விழா நடைபெற வேண்டும். தசரா திருவிழாவின்போது ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆட அனுமதி இல்லை என்றும் நீதிபதிகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வழக்கை முடித்து வைத்தது..

 

Categories

Tech |