Categories
சினிமா தமிழ் சினிமா

“குலதெய்வ கோவிலில் காதலருடன்”….. பொங்கல் வைத்து வழிபட்ட நயன்தாரா…. வைரலாகும் புகைப்படம்….!!!

நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து அவரின் குல தெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தார்.

போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் இவர்கள் அடிக்கடி வெளியில் சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டே நிச்சயம் செய்துகொண்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து ரசிகர்கள் திருமணம் எப்போது என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல்வேறு கோவில்களுக்கு ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதற்காக நயன்தாரா சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு 11:40 மணிக்கு வந்தார். அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். அந்த கோவிலில் குவிந்திருந்த ஏராளமான ரசிகர்கள் நயன்தாராவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இதனால் அந்த கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

Categories

Tech |