திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள விலத்தூர் மேல தெருவில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் குமார் தனது மகன் ஹரிகிருஷ்ணன்(16), தங்கை மகன் பாரதி(10) ஆகிய இரண்டு பேருடன் மோட்டார் சைக்கிளில் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாலம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாரதி பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறுவன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.