மும்பையில் குலாப் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் குலாப் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குலாப் புயல், அரபிக்கடல் பகுதிக்கு இடம் பெயர்வதால் அதன் பாதிப்பில் கரையோர நகரங்களுக்கு தொடர் மழை பெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.