குலாப் புயல் எதிரொலியால் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. குலாப் புயல் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரைகளுக்கு இடையே இன்று இரவு கரையை கிடைக்கிறது.. குலாப் புயல் இன்று தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர், சென்னை, நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.