சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 7 மணி அளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கட்டிடங்கள் லேசாக குலுங்கி உள்ளன. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் அச்சமடைந்த குடியிருப்புவாசிகள் வீடுகளிலிருந்து தங்களுடைய உறவினர்களை வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பலர் தெருக்களில் ஓடி சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தோனேஷிய நிலநடுக்கத்திற்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.