Categories
உலக செய்திகள்

குல்பூஷண் ஜாதவ் வழக்கு… இரண்டு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை நியமித்த நீதிமன்றம்..!!

குல்பூஷன் ஜாதவ் வழக்கை விசாரிக்க  இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானை உளவு பார்த்ததாக குற்றம் கூறி அந்நாட்டின் ராணுவத்தினர் சென்ற 2014 ஆம் ஆண்டு அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் குல்பூஷணுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அதனை சகித்துக் கொள்ள முடியாத இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடி சென்றது. குல்பூஷண் வழக்கில் பாகிஸ்தான் வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையாகவும் நடந்து கொள்ளவில்லை என இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. அதன் பின்னர் குல்பூஷணை தூக்கிலிடுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்து இருந்தது. சென்ற ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் குல்பூஷண் வழக்கை நியாயமான முறையில் மேற்கொண்டு அவருடைய மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

அது மட்டுமன்றி குல்பூஷணை சந்திக்க இந்திய தூதரக அலுவலர்களை அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சென்ற மே மாதம் குல்பூஷண் தண்டனைக்கு எதிராக  வழக்கை மறு சீராய்வு செய்வதற்காக பாகிஸ்தான் அரசு அவசர சட்டம் ஒன்று பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அக்தர் தலைமையில், நீதிபதி ஹாசன் ஔரங்கசீப் ஆகியோர் அடங்கிய அமர்வு குல்பூஷண் ஜாதவ் வழக்கை விசாரிக்க இருக்கின்றது. இதில் ஜாதவ் சார்பில் வழக்கறிஞரை நியமிக்க கோரி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |