ஆந்திராவில் குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த கைக்கலூர் பகுதியை சேர்ந்த குளத்தின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவர்கள் குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து அவர்களை தேடியுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.