முதியவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராச்சிலை கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நீண்டநேரமாகியும் வெள்ளைச்சாமி வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு வெள்ளைச்சாமி சடலமாக கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.