கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடத்துறை சின்ன குளத்தில் பரிசிலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கோபி அருகே உள்ள ஓடத்துறை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் அதே பகுதியில் உள்ள சின்ன குளத்தில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மாணிக்கம் கடந்த சனிக்கிழமை இரவு குளத்தில் மீன் பிடிக்க வலை விரிப்பதற்காக சென்றுள்ளார். இரவு நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரின் உறவினர்கள் அவரை தேடி குளத்தின் கரை பகுதிக்கு வந்த தேடிப்பார்த்தும் அவர் கிடைக்காத நிலையில், கவுந்தம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை குளத்தின் நடுப்பகுதியில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது சடலமாக மிகுந்தது மாணிக்கம் உடல் என்பது தெரியவந்தது. இதுகுறித்து கவுந்தம்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.