செங்கல்பட்டு மாவட்டத்தில் நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்ற வாலிபர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஆப்பூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து அந்தப் பகுதியிலுள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் சகதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உடனிருந்த நண்பர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.