புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி விவசாயி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டாத்தி கிராமத்தில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் விவசாய பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரை அப்பகுதியிலுள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது படிக்கட்டில் துணி துவைத்து கொண்டிருக்கும் போது பாசி வழுக்கியதில் தவறி விழுந்த சின்னத்துரை தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சின்னத்துரையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சின்னத்துரை பரிதாபமாக இறந்து விட்டார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.