Categories
தேசிய செய்திகள்

குளத்தில் விழுந்த பட்டம்…. எடுக்க முயன்ற சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!

குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் கரோத் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சத்கேடா கிராமத்தில் 13 வயது சிறுவன் ஷாபீர் ஹூசைன் வசித்து வந்தார். இந்நிலையில் சிறுவன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது பட்டம் திடீரென காணாமல் போய்விட்டது.  இதையடுத்து பட்டத்தில் இருந்த நூலைப் பின்தொடர்ந்து சென்ற சிறுவன் பட்டம் குளத்தில் விழுந்துள்ளதை கண்டுள்ளார்.

இதனால் குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |