போளூர் அருகே குட்டையில் மூழ்கி அக்காள்- தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரை அடுத்த பெரியகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீ பக்சிங் இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இங்கு கூர்காவாக பணிபுரிகின்றார். இவருக்கு 7 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளன. இவர்களில் சாந்தி பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பும் , பகவதி காந்தி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
பெரியகுளம் கிராமத்தின் அருகே உள்ள ஏரியின் பக்கத்தில் 6 அடி ஆழமுள்ள குட்டை உள்ளது. தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக குட்டையில் தண்ணீர் பெருகி உள்ளன. இந்நிலையில் பகவதி, சாந்தி ஆகிய இருவரும் நேற்று கிராமத்தின் அருகே உள்ள குட்டையில் குளிக்க சென்றுள்ளனர். தண்ணீர் அதிகமாக இருந்ததாலும் இருவருக்கும் நீச்சல் தெரியாததாலும் குளிப்பதற்காக குட்டையில் இறங்கிய பொழுது தண்ணீரில் மூழ்கினர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் குட்டையில் இரங்கி தேடதொடங்கிய நிலையில் சிறிது நேரத்தில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த தகவலை அறிந்த ஸ்ரீ பகத்சிங்கும் அவருடைய மனைவி சீதாசிங் மற்றும் ஐந்து சகோதரிகள், சகோதரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுத சம்பவம் நெஞ்சை கரைய வைத்தது போல் இருந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.