குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ராமபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவராஜ். இவருடைய மகன் சித்தேஸ்வரன் செங்கல்பட்டில் இருக்கின்ற அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ படித்துக் கொண்டிருந்தார். அதே கிராமத்தில் இருக்கும் ராஜேந்திரன் என்பவரின் மகன் ஆகாஷ். இவர் கோவையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிகாம் படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நண்பர்களான இருவரும் நென்மேலியில் இருக்கும் விவசாய கிணற்றிற்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக நண்பர்கள் இருவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றிலிருந்து இருவரின் உடலையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.