Categories
தேசிய செய்திகள்

“குளிக்கப் போறேன் குழந்தையை பாத்துக்கோங்க”… 4 மாத குழந்தையை நம்பி விட்டுச் சென்ற பெண்… பின்னர் அரங்கேறிய கொடுமை…!!!

திருப்பதி பேருந்து நிலையத்தில் 4 மாத ஆண் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி அலிபிரி அருகே உள்ள பாலாஜி பஸ் நிலையத்தில் நேற்று இரவு 4 மாத ஆண் குழந்தையுடன் வீரபத்திரா மற்றும் கங்குலம்மா ஆகியோர் தங்கி இருந்துள்ளனர். எப்பொழுதும் அந்த பேருந்து நிலையத்தில் இவர்கள் தங்குவது வழக்கம். அவர்களுக்கு அருகில் ஆஷா என்ற பெண் வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வீரபத்ரா பொருள் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். கங்குலம்மா தன்னுடைய குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி ஆஷாவிடம் விட்டு விட்டு குளிக்க சென்றுள்ளார்.

குளித்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது அந்த குழந்தையுடன் ஆஷா காணாமல் போனார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கங்குலம்மா இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆஷாவின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது கர்நாடக மாநிலம் மைசூரில் சேர்ந்த ஒருவருடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள அலிபிரி காவல்துறையினர் குழந்தையை கடத்தி சென்ற ஆஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |