தண்ணீரில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கள் கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுக்கிரவாரபட்டி பகுதியில் அமைந்துள்ள பேப்பர் ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்தி நேற்று குடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கார்த்திக் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து கார்த்திக்கின் மனைவியான மாரிச்செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.