நீரோடையில் குளிக்க சென்ற சிறுவர்கள் 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பூதேவிபேட்டா கிராமத்தை சேர்ந்த சில வசந்தவாடா கிராமத்திற்கு சென்றனர். அவர்களில் 6 சிறுவர்கள் அங்கிருந்த நீரோடைக்கு குளிப்பதற்காக சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர். இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் தண்ணீரில் குதித்து சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவர்களை தேடும் பணி தொடர்ந்தது. வெகு நேர தேடுதலுக்கு பின் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மற்ற இரண்டு சிறுவர்களின் சடலம் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.