தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கொட்டாயூர் பகுதியில் சிவானந்தம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் சிவானந்தம் நெடுங்கல் முனியப்பன் கோவில் அருகே இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவானந்தத்திற்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீரில் மூழ்கி சிவானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தொழிலாளியின் உடலை மீட்டனர். பின்னர் சிவானந்தத்தின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.