குளிப்பதற்காக சென்ற நபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜபுரம் 1-வது தெருவில் கூலி தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடியிலுள்ள குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மழையின் காரணமாக தெப்ப குளத்தில் நீர் நிரம்பி இருந்தது. எனவே மாரிமுத்து தெப்பக்குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.