Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தண்ணீரில் மூழ்கி மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் கருவூலத்தில் மாற்றுத்திறனாளியான சோழன்(45) என்பவர் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சோழன் குளித்துவிட்டு வருவதாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

இதனை அடுத்து ராஜன் வாய்க்கால் கதவணை மதகு அருகே சோழனின் மோட்டார் சைக்கிள், துணிகள், செயற்கை கால் ஆகியவை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சோழனின் உடலை மீட்டனர். அதன் பிறகு சோழனின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |