முல்லை பெரியாற்றில் குளிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கோம்பை பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உத்தமபாளையம் பகுதியில் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த முதியவர் சம்பவத்தன்று முல்லை பெரியாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இளங்கோவன் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதனைபார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற உத்தமபாளையம் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.