குளத்திற்கு குளிக்க சென்ற மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தொக்கலாகுடி கிராமத்தில் அஞ்சம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அஞ்சம்மாள் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மூதாட்டியை படகு மூலம் தேடி கண்டுபிடித்து அவரை சடலமாக மீட்டனர்.
இதனையடுத்து அஞ்சம்மாளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.