வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு முருகனின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் முருகனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.