பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர்கள் அழகுதுரை-அழகம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஹன்சிகா, பிரசாந்த் என 2 குழந்தைகள். பிரசாந்த் மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அழகம்மாள் தனது 2 குழந்தைகளையும் அழைத்து அசூர் கல்லாங்காட்டு ஏரிக்கு குளிக்க சென்றனர். அந்த சமயத்தில் பிரசாந்த் திடீரென ஏரிக்குள் மூழ்கினான். அதை கண்ட அழகம்மாள் மற்றும் மகள் ஹன்சிகா பிரசாந்தை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக ஹன்சிகா ஏரிக்குள் விழுந்து விட்டார்.
உடனே அழகம்மாள் பிரசாந்தை விட்டுவிட்டு ஹன்சிகாவை மீட்டு கரையில் விட்டார். அதற்குள் பிரசாந்த் நீருக்குள் மூழ்கினார். அழகம்மாள் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து ஏரிக்குள் மூழ்கி தேடினர் ஆனால் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பிரசாந்தை சடலமாக மீட்டெடுத்தனர். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரசாந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.